மேற்கு வங்கத்தில் மமதாவின் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக முதல்முறையாக ஆட்சியமைக்கவிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் ஆளும் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி என 4 நான்கு முனைப் போட்டி நிலவியது.
தொடர்ந்து 4 ஆவது முறையாக மமதா பானர்ஜி ஆட்சியமைக்க கடுமையான பிரசாரம் செய்தார். அதேபோல முதல்முறையாக ஆட்சியமைக்க பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டது.
அதன்படியே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின்படி பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி பாஜக 193 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் 95 இடங்களிலும் முன்னிலையில்உள்ளது. இடதுசாரி 3 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் ஒருதொகுதியில்கூட தற்போது முன்னிலையில் இல்லை.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவை 148 இடங்கள். பாஜக இந்த பெரும்பான்மையைப் பெற்றுள்ளதால் ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் கடந்த தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்ற பாஜக, இந்த முறை முதல்முறையாக ஆட்சியமைக்கிறது. இதன் மூலமாக மேற்குவங்கத்தில் பாஜக வரலாறு படைக்கிறது.
Summary
BJP Makes History in West Bengal, Forms Government for the First Time
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#Podcast | மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிரா 2.0?: மமதாவுக்கு செக்! | News and Views | EPI - 44

மேற்கு வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்: 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!

மேற்கு வங்கத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் தொடக்கம்!
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


