ஜம்மு-காஷ்மீரில் வால்நட் தொழிற்சாலையில் தீ விபத்து
ஜம்மு-காஷ்மீரின், சம்பா மாவட்டத்தில் உள்ள வால்நட் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.


ஜம்மு-காஷ்மீரின், சம்பா மாவட்டத்தில் உள்ள வால்நட் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள வால்நட் எரிந்து நாசமானது.
தீ விபத்து குறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில்,
பாரி பிராமணாவில் உள்ள பீர்பூர் தொழில் வளாகத்தில் உள்ள வால்நட் தொழிற்சாலையில் அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தால் தொழிற்சாலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 12 மணி நேரத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயை அணைக்க பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணங்கள் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...