ஒமைக்ரான்-எக்ஸ்இ எப்படிப்பட்டது தெரியுமா? நுண்ணுயிரியல் நிபுணர் விளக்கம்

மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் நுண்ணுயிரியல் துறை நிபுணர் டாக்டர் ககன்தீப் காங் விளக்கம் அளித்துள்ளார்.
ஒமைக்ரான்-எக்ஸ்இ எப்படிப்பட்டது தெரியுமா? நுண்ணுயிரியல் நிபுணர் விளக்கம்
ஒமைக்ரான்-எக்ஸ்இ எப்படிப்பட்டது தெரியுமா? நுண்ணுயிரியல் நிபுணர் விளக்கம்


புது தில்லி: தற்போதைய நிலையில், ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸானது மிகவும் வேகமாகப் பரவும் திறன்கொண்டது என்றும், மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் நுண்ணுயிரியல் துறை நிபுணர் டாக்டர் ககன்தீப் காங் விளக்கம் அளித்துள்ளார்.

"ஒமைக்ரான்-எக்ஸ்இ பற்றி கவலைப்படத்தேவையில்லை. ஏன் புதிய வகை வைரஸைப் பார்த்து அச்சப்பட வேண்டும்? வைரஸ் என்றாலே அதன் உருமாறிய வைரஸ்கள் வந்து கொண்டுதானிருக்கும்" என்று வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் ககன்தீப் காங் கூறியுள்ளார்.

தற்போது பரவி வரும் ஒமைக்ரான்-எக்ஸ்இ, உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை. எனவே அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்ரிக்காவிலிருந்து வந்த 50 வயது பெண்ணுக்கு ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் கண்டறியப்பட்டதாக மும்பை மாநகராட்சி புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. பிப்ரவரி மாதம் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, அந்த கரோனா வைரஸ் ஒமைக்ரான்-எக்ஸ்இ வகையைச் சேர்ந்தது என்று தற்போது வைரஸ் மரபணு வரிசை முறை ஆய்வில் தெரிய வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மறுத்திருந்தார். 

ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் என்பது ஒமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 வின் கூட்டுச் சேர்க்கையாக உள்ளது. இது ஒமைக்ரானை விட 10 மடங்கு கூடுதலாக பரவும் தன்மை கொண்டது. 

தொடர்ந்து கரோனா வைரஸின் உருமாறிய வைரஸ்கள் வந்து கொண்டுதானிருக்கும். இது பற்றி அறிவித்துக் கொண்டேதானிருப்பார்கள். இது முந்தைய வைரஸ்களைக் காட்டிலும் அதிகம் பரவும் திறன் கொண்டதுதான். ஆனால், அது அபாயத்தை ஏற்படுத்துமா என்றால்? இந்த நொடி வரை அப்படி இல்லை. ஏற்கனவே பிஏ2 பரவிய போது மிகுந்த அச்சம் ஏற்பட்டது. ஆனால் அது பிஏ1 ஐ விட அதிக அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை.

அதிகம் பரவும் என்பது ஒரு விஷயமேயில்லை. அதிகமானோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில், நான் கூட அது பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்கிறார் மருத்துவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com