ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ஆளுநர் ஆர்.என்.ரவி - மத்திய கல்வி அமைச்சர் சந்திப்பு

புது தில்லி சென்றிருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிராதனை சந்தித்தார்.

புது தில்லி சென்றிருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிராதனை சந்தித்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் பயணமாக நேற்று(ஏப்ரல்-7) காலை மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக புது தில்லி சென்றார். அங்கு அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட விவகாரங்களை முன் வைத்து, தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி, மக்களவையில் திமுக உறுப்பினர்கள் இந்த வாரம் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தில்லி சென்ற தமிழக ஆளுநர் மத்திய கல்வி அமைச்சரை இன்று சந்தித்தார்.

சந்திப்பு குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான், ’மாநிலத்தில் தமிழ் மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் குறித்த கற்றல் மற்றும் திறன்களை மேம்படுத்துதல்,  நாட்டின் கல்விக் கொள்கை 2020 (NEP 2020)  நடைமுறைப்படுத்தல் உள்பட பல அம்சங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம்’ எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com