புது தில்லி: நாட்டில், ஆங்கில மொழிக்கு மாற்றாக ஹிந்தி மொழியை ஏற்க வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அலுவல் மொழி ஆணையத்தின் 37வது கூட்டத்தில் பேசிய அமித் ஷா இவ்வாறு கூறியிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் அலுவல் மற்றும் மத்திய அரசு நடத்தும் நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பு மொழியாக ஹிந்தியை அறிவித்துள்ளார். இதனால், ஹிந்தி மொழியின் முக்கியத்துவம் நிச்சயம் அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பேசிய அமித் ஷா, மத்திய அரசு வகுக்கும் 70 சதவீத கொள்கைகள் தற்போது ஹிந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
மத்திய அரசின் அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒற்றுமையை அதிகரிப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றும் நேரம் வந்துவிட்டது. எனவே, ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும், உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள பேசும் மொழிதான் இந்திய நாட்டின் மொழி என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


