
ஜார்கண்டில் உள்ள லோஹர்டகாவின் ஹிர்ஹி கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டதில், ஒருவர் பலியானர், அதைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் கூறுகையில்,
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லோஹர்டகா மாவட்டத்தில் உள்ள ஹிர்ஹி பகுதியில் ஷோபா யாத்திரையின்போது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்தனர். பல வாகனங்கள் எரிக்கப்பட்டன.
ராம நவமியின்போது இருபிரிவினருக்கு இடையே மோதல் சம்பவங்கள் நடைபெற்றதை முன்னிட்டு ஹிர்ஹி கிராமத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் போலீஸ் தரப்பில், கூடுதல் படைகள் மற்றும் மூத்த அதிகாரிகள், இரண்டு, துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் 3 கண்காணிப்பாளர்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நிலைமை கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மோதலில் உயிரிழந்தவர், லதேஹர் மாவட்டத்தில் வசிப்பவர். இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியுள்ளோம். தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.