ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

நேஷனல்​ ஹெரால்டு வழக்கு: மல்லிகார்ஜுனா கார்கேவிடம் அமலாக்கத்துறை விசாரணை

இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

News image

மல்லிகாா்ஜுன காா்கே

Updated On :11 ஏப்ரல் 2022, 7:45 am

DIN

நேஷனல்​ ஹெரால்டு வழக்கில் பண மோசடி தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி அமலாக்கத்துறை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ள கார்கேவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் சில விவகாரங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளதால் பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக அமலாக்கத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவால், கடந்த 1938ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு ஆங்கிலப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகையை மேம்படுத்த ரூ.90.25 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி வட்டியில்லா கடன் அளித்ததைக் காரணம் காட்டி, அதன் பதிப்பாளரான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை ராகுல், சோனியா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டி, சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.