புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் கடைசி மைல்கல்லை அடையும் வகையில், தீவுகளில் தடையற்ற போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து வானிலைக்கும் ஏற்ற பாதுகாப்பான சாலைகளை அமைக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் தேசிய நெடுஞசாலை 4-ல் உள்ள பியோட்னாபாத் முதல் ஃபெரார்கஞ்ச் வரையிலான பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு நிறைவடைந்ததாக கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில், இந்த 26 கிமீ நீளமுள்ள சாலை அந்தமான் - நிக்கோபார் தீவு இணைப்பு திட்டத்தின் கீழ் 170 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டை மேம்படுத்துவதன் மூலம், போர்ட் பிளேயரில் இருந்து அந்தமான் மாவட்டத்தின் பிற நகரங்களுக்கு தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
தேசிய நெடுஞசாலை-4 எனப்படும் அந்தமான் ட்ரங்க் சாலை, தீவுகளின் உயிர்நாடி என்றும், அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பழனி பகுதியை குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


