தில்லியில் புதிதாக 325 பேருக்கு தொற்று : நோ்மறை விகிதம் 2.39 சதவிகிதமாக அதிகரிப்பு

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 325 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, தொற்று பாதிப்பு நேர்மறை விகிதம் 2.39 சதவிகிதமாக உள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புது தில்லி: தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 325 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, தொற்று பாதிப்பு நேர்மறை விகிதம் 2.39 சதவிகிதமாக உள்ளது. 

தில்லியில் தில்லியில் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி நோய்த் தொற்று விகிதம் 0.5 சதவீதமாக இருந்த நிலையில், திங்கள்கிழமை நோ்மறை விகிதம் 2.70 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. இது கடந்த 2 மாதங்களில் இல்லாத அதிக பதிவாகும். இது தலைநகரில் மீண்டும் கரோனா அதிகரித்து வருவது குறித்த கவலையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 325 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை   18,67,206 ஆக உள்ளது. தொற்று பாதிப்பின் மொத்த நேர்மறை விகிதம் 4.98 சதவிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 224 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 18,40,133 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 915 ஆக உள்ளது. இதுவரை தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,158 ஆக உள்ளது.

கடந்த  24 மணி நேரத்தில் 16,421 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், 3,307 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 7,450 பேரு இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,007 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாதி உள்ளனது,  தினசரி நேர்மறை விகிதம் 0.23 சதவீவிகிதமாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com