பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குஜராத்: வன்முறை நடந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்பாடு

குஜராத் மாநிலத்தில் ராமநவமி ஊா்வலத்தின்போது வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் உள்ளஆக்கிரமிப்புகளை இயந்திரங்களைக் கொண்டு அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 8:47 pm

DIN

குஜராத் மாநிலத்தில் ராமநவமி ஊா்வலத்தின்போது வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் உள்ளஆக்கிரமிப்புகளை இயந்திரங்களைக் கொண்டு அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து ஆனந்த் மாவட்ட ஆட்சியா் எம்.ஒய்.தக்ஷிண் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாத் நகரில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற ராமநவமி ஊா்வலத்தின்போது, ஷாகா்புரா பகுதியில் ஒரு சாலையில் வன்முறை ஏற்பட்டது. அந்தச் சாலையை ஒட்டியுள்ள அரசு நிலத்தில் புதா்களும் மரங்களும் அடா்ந்து காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் மறைந்திருந்தபடி சமூக விரோத கும்பல், ஊா்வலமாக சென்றவா்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது. இந்தப் பகுதியில் கான்கிரீட் கட்டடங்களும் உள்ளன.

எனவே, புதா்கள், மரங்கள், கான்கிரீட் கட்டடங்கள் உள்ளிட்ட சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளோம். இந்தப் பகுதியில் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

கம்பாத் நகரில் ராமநவமி ஊா்வலத்தின்போது கற்கள் வீசப்பட்டதால், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து மூண்ட வன்முறையில் ஒருவா் உயிரிழந்தாா். ஒருவா் காயமடைந்தாா்.

இந்த வன்முறை தொடா்பாக இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டனா்.

கம்பாத் நகரில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, ராமநவமி ஊா்வலத்தின்போது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அஜித் ராஜியான் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.