மகாராஷ்டிரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: உயிரைப் பணயம் வைத்து நீர் எடுக்கும் பெண்கள்

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பத்தில் தத்தளித்து வரும் நிலையில், மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் பெண்கள் தண்ணீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
மகாராஷ்டிரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: உயிரைப் பணயம் வைத்து நீர் எடுக்கும் பெண்கள்

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பத்தில் தத்தளித்து வரும் நிலையில், மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் பெண்கள் தண்ணீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நாசிக்கில் உள்ள ரோஹிலே கிராமத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. உயிரைப் பணயம் வைத்து பெண்கள் தண்ணீர் எடுக்கக் கிணற்றில் இறங்குகின்றனர். 

அதில் ஒரு பெண்மணி கூறுகையில், 

கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க பெண்கள் 2 கி.மீட்டர் தூரத்திலிருந்து வருகிறார்கள். தண்ணீர் பற்றாக்குறையால் கிணற்றுக்குள் இறங்கி நீர் எடுக்க வேண்டியுள்ளது. 

மாணவி ஒருவர் கூறுகையில், 

நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் கிராமத்தில் தண்ணீர் இல்லை. தண்ணீர் எடுக்கத் தொலைதூர கிராமத்திற்குச் செல்கிறோம். சில சமயங்களில் குடும்பத்திற்கு தண்ணீர் எடுக்க வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தேர்வுக்குக் கூட தாமதமாகிறது என்றார். 

இருப்பினும் அதிகாரி ஒருவர் கூறுகையில், குறைந்தபட்சம் ஜூன் வரை தண்ணீர் பற்றாக்குறைக்கான வாய்ப்புகள் இல்லை என்றார். 

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வரும் புள்ளி விவரங்களின்படி, 

தனித்தனியாகக் குடிநீர் வைக்கிறோம். பாசனத்துக்கு தண்ணீர் ஒதுக்குகிறோம். அதனால், குறைந்தது ஜூன் வரை தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com