
மும்பை: 5 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், 40 வயது நபருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தைக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
தந்தையின் வழக்குரைஞர் அளித்த வாதங்களை எல்லாம் நிராகரித்துவிட்ட நீதிமன்றம், ஒரு மகளுக்கு அவரது தந்தைதான் கோட்டையாக, நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
இதையும் படிக்க.. 'சரணடைய மாட்டோம்': மரியுபோல் எஃகு ஆலையில் கடும் போர்
இந்த குற்றச்செயல் என்பது மிகவும் மோசமான குற்றமாகும். சட்டத்தில் கூறப்பட்டிருப்பதைவிட, குறைவான தண்டனை வழங்க இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.