இன்று தூய்மைக்கான புதிய அத்தியாயம் தொடங்குகிறது:  பிரதமர்
இன்று தூய்மைக்கான புதிய அத்தியாயம் தொடங்குகிறது: பிரதமர்

இன்று தூய்மைக்கான புதிய அத்தியாயம் தொடங்குகிறது: பிரதமர்

பொதுமக்களின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய சக்தியை அளித்துள்ளது. இதற்கு, தூய்மை இந்தியா திட்டமே சிறந்த உதாரணம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

புது தில்லி:  பொதுமக்களின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய சக்தியை அளித்துள்ளது. இதற்கு, தூய்மை இந்தியா திட்டமே சிறந்த உதாரணம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கழிவறை காட்டுவதாக இருக்கட்டும் அல்லது கழிவுகளை அகற்றுவதாக இருக்கட்டும், பாரம்பரியத்தை பாதுகாப்பதாக இருக்கட்டும் அல்லது தூய்மைக்காக போட்டியிடுவதாக இருக்கட்டும், அனைத்து வகையிலும் நாடு தூய்மைத் துறையில் புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது, பொதுமக்களின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு ஒரு புதிய சக்தியை அளிக்க முடியும் என்பதற்கு தூய்மை இந்தியா திட்டம் நேரடி சாட்சியாக இருக்கிறது. அது கழிவறை காட்டுவதாக இருக்கட்டும் அல்லது கழிவுகளை அகற்றுவதாக இருக்கட்டும், பாரம்பரியத்தை காப்பதாக இருக்கட்டும் அல்லது தூய்மைக்காக போட்டியிடுவதாக இருக்கட்டும்.

அனைத்து வகையிலும் இன்று நாடு தூய்மைத் துறையில் முன்னணியில் உள்ளது. அதன் மூலம் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடு முழுவதும் நகரங்கள் மற்றும் கிராமங்களில் சுமார் 11.5 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதையும் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com