

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்தும் மோதலில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் உள்ள மால்வா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தீவிரவாதிகளுடன் நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் 3 வீரர்கள் காயமடைந்துள்ளதாக காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.