தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காரை காணவில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் புகார்

தில்லி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் அபிஷேக் தத், தனது எஸ்யுவி காரை திருடுப்போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 12:58 pm

DIN


புது தில்லி: தில்லி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் அபிஷேக் தத், தனது எஸ்யுவி காரை திருடுப்போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புது தில்லியில், ஜாங்புரா விரிவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது தனது வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார், வெள்ளிக்கிழமை காலை திருடுப்போனதாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை நிற டோயடோ ஃபர்சூனர் கார், ஹரியாணாவின் பதிவெண் கொண்டது இன்று காலை காணாமல் போயிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கார் திருடுப்போனது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளில் பதிவான விடியோவைக் கொண்டு குற்றவாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.