மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கேரளம்: மீண்டும் முகக்கவசம் கட்டாயம்; மீறினால் தண்டனை

கேரளத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2022, 8:03 am

கேரளத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கரோனா எண்ணிக்கைகள் கட்டுபாட்டிற்குள் வந்தாலும் கடந்த சில நாள்களாக  தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, தென்னிந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், கேரளத்தில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால் தண்டனைகளும் அபராதமும் விதிக்கப்படும் என பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.