இந்தி தேசிய மொழியா?...உளறித் தள்ளிய அஜய் தேவ்கன்...பாடம் எடுத்த கர்நாடக தலைவர்கள்

இந்தி தேசிய மொழி அல்ல என கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர்கள் இருவர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு பாடம் எடுத்துள்ளனர்.
அஜய் தேவ்கன்
அஜய் தேவ்கன்
Published on
Updated on
1 min read

இந்தி இந்தியாவின் தேசிய மொழி என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கூறியிருப்பதற்கு கர்நாடக தலைவர்கள் பதில் அளித்திருப்பது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்தி தேசிய மொழி அல்ல என கர்நாடக முன்னாள் முதல்வர்கள் இருவர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு பாடம் எடுத்துள்ளனர்.

இந்தி எப்போதும் நாட்டின் தேசிய மொழியாக இருந்ததில்லை என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பதிலடி அளித்துள்ள நிலையில், பாஜகவின் ஊதுகுழலாக அஜய் தேவ்கன் செயல்படுவதாக மற்றொரு முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி சாடியுள்ளார். அஜய் தேவ்கனுக்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்ட குமாரசாமி, "ஒரு நாடு, ஒரு வரி, ஒரு மொழி, ஒரு அரசு என இந்து தேசியவாதத்தை முன்வைக்கும் பாஜகவின் ஊதுகுழலாக அஜய் தேவ்கன் உளறுகிறார்" என பதிவிட்டுள்ளார்.

அஜய் தேவ்கனின் ட்வீட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, "தேசிய மொழியாக இந்தி இருந்ததில்லை. இருக்கபோவதும் இல்லை. நாட்டின் மொழிவாரி பன்முகத்தன்மையை மதிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை. ஒவ்வொரு மொழிக்கும் அதன் மக்கள் பெருமை படும் அளவுக்கு சிறப்பான வரலாறு உண்டு. கன்னடனாக இருக்க நான் பெருமைபடுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

கன்னட திரைப்படமான கேஜிஎப் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இந்தி பேசும் மாநிலங்களில் சக்கைபோடு போட்டுவருகிறது. இதுகுறித்து பேசிய கன்னட நடிகர் சுதீப், "இந்த கன்னட திரைப்படம் இந்தியா முழுமைக்கும் எடுக்கப்பட்ட படம் என அனைவரும் சொல்கிறார்கள். ஒரு சிறிய திருத்தம்.

இந்தி ஒன்றும் தேசிய மொழி அல்ல. பாலிவுட் படங்கள் பல தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஆனால், அங்கு பெறும் வெற்றியை இந்த திரைப்படங்கள் இங்கு பெற திணறுகின்றன. ஆனால், நாங்கள் எடுக்கும் திரைப்படங்கள் அனைத்து இடங்களில் நல்ல வெற்றியை பெறுகின்றன" என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த அஜய் தேவ்கன், "நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் இந்தி இருந்தது. இன்றும் இருக்கிறது. எப்போதும் இருக்கும்" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com