பஞ்சாப்: ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் சுட்டுக் கொலை 

பஞ்சாபின் மலேர்கோட்லா மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நகராட்சி கவுன்சிலர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக்கொள்ளப்பட்டார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பஞ்சாபின் மலேர்கோட்லா மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நகராட்சி கவுன்சிலர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக்கொள்ளப்பட்டார். 

ஆம் ஆத்மி கட்சியின் 18வது வார்டு நகராட்சி கவுன்சிலர் அக்பர் போலி, உட்ற்பயிற்சிகூடத்தில் இருக்கும் போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மனைவி மற்றும் 3 மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். மிகவும் இரக்க குணம் கொண்டவரென சுற்றத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர். 

இதுக்குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் தனிப்பட்ட விரோததிற்காக நடந்திருக்கலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால் எதையும் உடனடியாக சொல்ல முடியது என்றும், விசாரணை முடிந்ததும் தகவல் தரப்படுமென தலைமை காவல்துறை அதிகாரி அவ்னீத் குமார் கூறினார்.

ஏற்கனவே மே மாதம் 29ஆம் நாள் பிரபல பாடகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா (27) மான்சா மாவட்டத்தில் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

தற்போது இன்னொரு துப்பாக்கிசூடு நடந்திருப்பது பஞ்சாப் பொது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com