குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி? மத்திய அரசு விளக்கம்

குரங்கு அம்மையிலிருந்து பாதுகாத்து கொள்ள செய்யக் கூடியவை,  செய்யக் கூடாதவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி? மத்திய அரசு விளக்கம்
Published on
Updated on
1 min read

குரங்கு அம்மையிலிருந்து பாதுகாத்து கொள்ள செய்யக் கூடியவை,  செய்யக் கூடாதவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் குரங்கு அம்மை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 8 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், கேரளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்ள செய்யக் கூடியவை,  செய்யக் கூடாதவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் குரங்கு அம்மை வர வாய்ப்புள்ளது?

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு குரங்கு அம்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

செய்யக் கூடியவை

  • குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவரை மற்றவர்களிடம் இருந்து தனிமைப் படுத்த வேண்டும்.
  • இரு கைகளையும் அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் அல்லது கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
  • குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்தால் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்.

செய்யக் கூடாதவை

  • குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் படுக்கைகள், துணிகள், பொருள்களை பயன்படுத்தக் கூடாது.
  • நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகளை, பாதிக்கப்படாதவர்களின் துணிகளுடன் சேர்ந்து துவைத்தல் கூடாது.
  • குரங்கு அம்மை அறிகுறி இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறக் கூடாது.
  • உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்பக் கூடாது.

இதுவரை 75 நாடுகளில் 16,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக சா்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. மாநில அரசுகளும் சா்வதேச விமான நிலையங்களில் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.