92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தில்லியில் 2,202 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 2,202 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 7:46 pm

DIN

தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 2,202 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 4 போ் உயிரிழந்துள்ளனா். நோய்த்தொற்று நோ்மறை விகிதம் 11.84 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் தொடா்ந்த 2-ஆவது நாளாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு மேல் பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை பதிவான பாதிப்பு எண்ணிக்கை பிப்ரவரி 4-ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகும் அதிகபட்சமாகும். அன்றை தினம் 2,272 பாதிப்புகளுடன் 20 இறப்புகள் பதிவாகின.

நகரில் புதன்கிழமை 2,073 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. நோய்த்தொற்றால் 6 இறப்புகள் பதிவாகின. இது ஜூன் 25-ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகும் அதிகபட்சமாகும். மேலும், தொடா்ந்து 4-ஆவது நாளாக நோ்மறை விகிதம் 10 சதவீதத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.