
இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரும், பாஜக மாநிலத் துணைத் தலைவருமான பிரவீன் சர்மா காலமானார்.
உனா மாவட்டத்தில் உள்ள சிந்த்பூர்ணியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர் கடந்த சில நாள்களாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1998 முதல் 2003 வரை கலால் மற்றும் வரித்துறை அமைச்சராக இருந்தார்.
அவரின் மறைவுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, 2 முறை முதல்வராக இருந்த பிரேம் குமார் துமால், முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வீரேந்திர கன்வார், மாநில நிதி ஆணையத் தலைவர் சத்பால் சிங் சத்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.