'உண்மையை சொல்வதை நிறுத்திக்கொள்ள மாட்டேன்': ராகுல் காந்தி

எனக்கு பயம் கிடையாது. நான் இப்படி தாக்கப்படும்போது மகிழ்ச்சியாகவே உணர்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: எனக்கு பயம் கிடையாது. நான் இப்படி தாக்கப்படும்போது மகிழ்ச்சியாகவே உணர்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்ததாவது:

உண்மையை சொன்னால் தாக்கபடுவேன். எனில் உண்மையை சொல்வதை நிறுத்திக்கொள்ள மாட்டேன். போரில் காயம் ஏற்படும்போது எப்படி மகிழ்ச்சியாக இருக்குமோ  அதுபோல் உள்ளது. இந்த சர்வாதிகார ஆட்சியை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர்களாக என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைத்து சுதந்திரமான அமைப்புகளும் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளது. அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. நாட்டில் நடக்கும் பிரச்னைகள், மக்கள் துயர் குறித்து மத்திய நிதி அமைச்சருக்கு தெரியவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்  உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை தில்லி காவல் துறையினர் காலை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com