புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில்  பூச்சொரிதல் விழா

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில்  பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு,   2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடைகளில் கொண்டுவந்த பூக்களால் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில்  பூச்சொரிதல் விழா

தஞ்சை: புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில்  பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு,   2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடைகளில் கொண்டுவந்த பூக்களால் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆடிமாதம் 3 ஆம் வெள்ளிக்கிழமையான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோயிலில் இருந்து நேற்றிரவு அலங்கரிக்கப்பட்ட  ரதங்களில் பூக் கூடைகளுடன் புறப்பட்ட   ஊர்வலம், இன்று புன்னைநல்லூர் வீதிகளில் வலம் வந்தது. பக்தர்கள் கும்மியாட்டத்துடன் கூடிய முளைப்பாரியை சுமந்தபடி  மாரியம்மன் கோயிலை அடைந்ததனர்.

தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடைகளில்  மல்லி, முல்லை, ரோஜா, கனகாம்பரம், செவந்திப்பூ, அரளிப்பூ,  மரிக்கொழுந்து, ஜாதிப்பூ  உள்ளிட்ட  அனைத்து வகை பூக்களாலும்,  ஸ்ரீரங்கம், திண்டுக்கல், குற்றாலம்  பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட  சென்பக மலரைக்  கொண்டும் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com