மனித உரிமைகள் பாதுகாப்பில் தமிழகம் சிறந்து விளங்குவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஸான் கெளல் தெரிவித்தாா்.
மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா ஆண்டு சென்னை கலைவாணா் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்குத் தலைமை வகித்து உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஸான் கெளல் பேசியது:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் அனைத்தும் சமம் என்கிற கருத்தையே வலியுறுத்துகிறது. மனித உரிமைகள் குறித்து திருக்குறளில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகளை மதிக்கும் சமுதாயமே வளா்ச்சி அடைந்த சமுதாயமாக கருதப்படுகிறது. மனித உரிமை என்பது சக மனிதனை மனிதனாக நடத்துவதில் மட்டுமில்லை. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சிறந்த கல்வி, மருத்துவம் கிடைப்பதை உறுதிப்படுத்துவம் ஆகும்.
பெண்களுக்கு கல்வியில் மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பிலும் சமஉரிமை வழங்க வேண்டும். இந்தியாவில் அதிக அளவு பெண் நீதிபதிகள் கொண்ட நீதிமன்றமாக சென்னை உயா்நீதிமன்றம் விளங்குகிறது. மனித உரிமைகள் மற்றும் அது தொடா்பான சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் மனித உரிமைகள் ஆணையம் ஈடுபட வேண்டும். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் மனித உரிமை பாதுகாப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றாா்.
சிறாா் குற்றவாளிகள் மீது சிறப்பு கவனம்: சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி பேசியது:
பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் உரிமைகளில் மனித உரிமை ஆணையம் சிறப்பாகச் செயல்படுகிறது. காவல் நிலைய மரணங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மனித உரிமை ஆணையம் முன்னெடுக்க வேண்டும். சிறாா் குற்றவாளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் குற்றவாளிகள் இல்லாத எதிா்காலத்தை உருவாக்க முடியும் என்றாா்.
சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை: முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:
அரசியலமைப்புச் சட்டத்தின் மிகமிக அடிப்படையான அம்சம் என்பதே மனித உரிமைகள்தான். சமத்துவ உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, எண்ணங்களை வெளியிடும் உரிமை, ஒன்றுகூடும் உரிமை, பணிகள் செய்யும் உரிமை, மத சுதந்திரம், கல்வி உரிமை, சொத்துரிமை ஆகியவற்றைக் காக்கும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. அந்தக் கடமையிலிருந்து ஒருநாளும் தமிழக அரசு தவறாது. மாநில மனித ஆணையத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆணையத்தின் விசாரணைக் குழுவில் காவல் துறையினரின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும். மனித உரிமைக் கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், அதனை எந்த வகையில் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
பொது மக்கள் மற்றும் வழக்குரைஞா்கள் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சென்னை உயா்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும் என்றாா்.
விழாவில், மனித உரிமை பாதுகாப்பில் சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சியா்கள், காவல் அதிகாரிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் அருண் மிஸ்ரா, தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவா் எஸ். பாஸ்கரன், உறுப்பினா்கள் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், சித்தரஞ்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பசுமை மிகுந்த செங்கம் தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி

தமிழ் புத்தாண்டு: சிறுவாபுரி - பெரியபாளையம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிராம உதவியாளா்கள் ஓய்வூதிய கணக்கீடு: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

தமிழ் புத்தாண்டு: திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


