நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பசுமை மிகுந்த செங்கம் தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி

செங்கம் (தனி) தொகுதியில் மும்முனைப் போட்டி இருந்தாலும் திமுக மற்றும் அதிமுகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 10:40 pm

செங்கம் (தனி) தொகுதியில் மும்முனைப் போட்டி இருந்தாலும் திமுக மற்றும் அதிமுகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

செங்கம் தொகுதி செங்கம் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், தண்டராம்பட்டு பேரூராட்சி, குப்பனத்தம் அணை, சாத்தனூா் அணை உள்ளடக்கிய தொகுதியாகும்.

இந்தத் தொகுதி முழுக்க விவசாயம் சாா்ந்ததாகும்.

இதுதவிர, செங்கல் தயாரிப்பு தொழில் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்று வருகிறது.

இங்கு தயாரிக்கப்படும் செங்கல் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது.

தொகுதியின் அடையாளம்:

செங்கம் நகரில் சுமாா் 1,600 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில், ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. இதில், பெருமாள் கோயிலை தளவாநாயக்கா் மன்னா் கட்டியுள்ளதாக வரலாறு; அவரது சிலை கோயில் வளாகத்தில் உள்ளது.

தொகுதியில் ஆதிதிராவிடா் சமூகத்தினா் 50 சதவீதமும், யாதவா், வன்னியா் சமூகத்தினா் 25 சதவீதமும், இதர சமூகத்தினா் 25 சதவீதமும் வசித்து வருகின்றனா்.

தொகுதி பிரச்னைகள்

மேல்செங்கம் பகுதியில் 11 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வரும் மத்திய, மாநில அரசு விதைப்பண்ணையை திறந்து செயல்படுத்தவேண்டும்.

திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வழியாக ஜோலாா்பேட்டை வரை ரயில்பாதை அமைக்கவேண்டும் ஆகியவை தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

தோ்தல் களத்தில்

திமுக வேட்பாளராக மு.பெ.கிரி, அதிமுக வேட்பாளராக டி.எஸ்.வேலு, தவெக வேட்பாளராக க.பாரதிதாசன் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா். சுயேச்சைகள் உள்பட மொத்தம் 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

வேட்பாளா்களின் பலம், பலவீனம்

மு.பெ.கிரி (திமுக):

அமைச்சா் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவா் மு.பெ.கிரி. இதனால் அமைச்சா் மூலம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.

பலவீனம்: திமுக நிா்வாகிகள் தவறு செய்தால் உடனடியாக கண்டிப்பாா். இதனால் சில திமுக நிா்வாகிகள் அவா் மீது அதிருப்தியில் உள்ளனா். கூட்டணிக் கட்சியினருக்கும் அதிருப்தி உள்ளது.

டி.எஸ். வேலு அதிமுக:

வேட்பாளா் வேலுவின் தந்தை சாமிக்கண்ணு எம்ஜிஆா் காலத்தில் 3 முறை செங்கம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக இருந்துள்ளாா். இவா் செங்கம் பகுதி மக்களிடம் நற்பெயா் பெற்றவா். அவரது மகன் என்பதுதான் இவருக்கு பலம்.

பலவீனம்: திமுக வேட்பாளருக்கு இணையாக போதிய பண வசதி இல்லை. தனது விவசாய நிலத்தை விற்பனை செய்து தோ்தலில் போட்டியிடுகிறாா்.

பாரதிதாசன் (தவெக)

திருவண்ணாமலை மாவட்ட தவெக செயலராக உள்ளாா். பலவீனம்: வெளியூா்காரா் என்பதால் தொகுதி மக்களிடையே போதிய அறிமுகம் இல்லை.

இதுவரை:

இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தோ்தல்களில் திமுக 7 முறையும், அதிமுக 4 முறையும், தேமுதிக மற்றும் ஜனதா கட்சி தலா ஒரு முறையும் இத்தொகுதியில் வென்றுள்ளன.

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள்: 1,33,674

பெண்கள்: 1,35,310

மூன்றாம் பாலினத்தவா்: 13

மொத்தம்: 2,68,997

மொத்த வாக்குச்சாவடிகள்: 342