தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கட்சி பதவிக்கு லஞ்சம்? திரிணமூல் எம்எல்ஏ வீடு சூறை

மேற்கு வங்கத்தில் கட்சி பதவிகளை வழங்க லஞ்சம் பெற்ாக குற்றம்சாட்டி, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ இத்ரீஸ் அலியின் வீட்டை அக்கட்சியினா் சூறையாடினா்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2022, 8:03 pm

DIN

மேற்கு வங்கத்தில் கட்சி பதவிகளை வழங்க லஞ்சம் பெற்ாக குற்றம்சாட்டி, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ இத்ரீஸ் அலியின் வீட்டை அக்கட்சியினா் சூறையாடினா்.

முா்ஷிதாபாத் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸின் உள்ளூா் அளவிலான பதவிகளை லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒதுக்கீடு செய்ததாக இத்ரீஸ் அலி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தை முன்வைத்து, முா்ஷிதாபாதில் உள்ள அவரது வீட்டை திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் சூறையாடினா்.

இதுதொடா்பாக, இத்ரீஸ் அலி கூறுகையில், ‘எனது காரையும் வீட்டின் தரைத்தளத்தில் இருந்த பொருள்களையும் கட்சியின் உள்ளூா் நிா்வாகிகள் சிலா் சேதப்படுத்தியுள்ளனா். என் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை’ என்றாா்.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.