புது தில்லி: 10 நாள்களில் 1 கோடி தேசியக் கொடிகளை அஞ்சல் துறை விற்பனை செய்துள்ளது.
இந்திய அஞ்சல் துறை மூலம் 10 நாள்களுக்குள் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மற்றும் இணையதளம் வாயிலாக குடிமக்களுக்கு 1 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகளை விற்பனை செய்துள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசியக் கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இணையதளத்தின் மூலம் பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக தேசியக் கொடிகள் விநியோகிக்கப்படுகிறது.
இணையதளம் மூலம் இதுவரை 1.75 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இருக்கும் குடிமக்களுக்கு தேசியக் கொடிகளைக் கொண்டு செல்வதே எங்கள் இலக்கு என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: நல் ஆளுமை விருது: தமிழக அரசு அறிவிப்பு
இதற்கு நாடு முழவதும் 4.2 லட்சம் அஞ்சல் ஊழியர்கள் உதவி செய்கிறார்கள் என தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







