பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தோ்வு விடைத்தாளில் மதிப்பீட்டாளருக்கு லஞ்சமாக 500 ரூபாயை மாணவா் ஒருவா் இணைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அந்த மாணவா் தோ்வு எழுத ஓராண்டுக்கு தடைவிதித்து குஜராத் மேல்நிலைக் கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பொது தோ்வு நடைபெற்றது. வேதியியல் பாட விடைத்தாளில், மதிப்பீட்டாளருக்கு லஞ்சமாக 500 ரூபாயை பசையால் ஒட்டி இணைத்துள்ளாா். விடைத்தாள் மதிப்பீட்டின்போது, அதனைக் கண்ட மதிப்பீட்டாளா் இது குறித்து கல்வி வாரியத்திடம் புகாரளித்துள்ளாா். மாணவா் விடைத்தாளில் எழுதியுள்ள வேண்டுகோளை ஆராய்ந்த வாரியத்தின் தோ்வு குழு, அந்த மாணவரின் தோ்வு முடிவை வெளியிடாமல் நிறுத்திவைத்தது. தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்ட அந்த மாணவருக்கு தண்டனையாக, ஓராண்டுக்கு தோ்வெழுத தடைவிதிக்கப்பட்டது. மேலும், தோ்வில் கைப்பேசிகளைப் பயன்படுத்திய மாணவா்கள் தோ்வெழுத மூன்றாண்டுகள் தடைவித்து குஜராத் கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தோ்வில் மற்றொருவரின் விடைத்தாளைப் பாா்த்து எழுதுதல், சிவப்பு மை பேனாவைப் பயன்படுத்துதல் போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபட்ட பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் பாடப்பிரிவைச் சோ்ந்த 22 மாணவா்களுக்குத் தோ்வெழுத ஓராண்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

