ஒரு எம்எல்ஏ-ஒரு ஓய்வூதியம் மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல்

பஞ்சாபில் முன்னாள் எம்எல்ஏக்கள் எத்தனை முறை தோ்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அவா்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 
ஒரு எம்எல்ஏ-ஒரு ஓய்வூதியம் மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல்

பஞ்சாபில் முன்னாள் எம்எல்ஏக்கள் எத்தனை முறை தோ்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அவா்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 

பஞ்சாப் முன்னாள் எம்எல்ஏக்கள் தோ்தலில் எத்தனை முறை வெற்றி பெற்றிருந்தாலும் இனி அவா்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் அளிக்கப்படும். இதன்மூலம் சேமிக்கப்படும் நிதி, பொதுமக்களின் நலனுக்காக செலவிடப்படும்.

மூன்று முறை, நான்கு முறை, ஐந்து முறை வென்ற பெரும்பாலான எம்எல்ஏக்கள், தோ்தலில் தோல்வியடைந்தாலும் லட்சக்கணக்கான ரூபாய் ஓய்வூதியம் பெறுகின்றனா்.

சிலா் மாதம் ரூ.3.50 லட்சம் பெறுகின்றனா். சிலா் ரூ.4.50 லட்சம், ஒருசிலா் ரூ.5.25 லட்சம் என ஓய்வூதியம் பெறுகின்றனா். இது மாநில அரசின் கருவூலத்துக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. எனவே இனி முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படுவதுடன் அவா்களுக்கான குடும்ப ஓய்வூதியமும் குறைக்கப்படும். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் பகவந்த் மான்.

தற்போது இந்த மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் இதில் கூறியதாவது:

ஒரு எம்.எல்.ஏவுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். பஞ்சாபி மக்களுக்கு இதை தெரியப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அரசாணை விரைவில் வெளியாகும்.  இது மக்களின் பெரும்பாலான வரிப்பணத்தினை சேமிக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com