ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் இறுதி போர்ட்ஃபோலியோ! எத்தனை ஆயிரம் கோடிகள்?

மறைந்த பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் பங்குகளின் மதிப்பு ரூ.33,000 கோடியை நெருங்கியிருக்கும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா

மறைந்த பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் பங்குகளின் மதிப்பு ரூ.33,000 கோடியை நெருங்கியிருக்கும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்

‘இந்தியாவின் வாரன் பஃபெட்’  என புகழப்பட்ட பங்குச் சந்தை முதலீட்டாளார் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா சுமாா் ரூ.46,000 கோடி மதிப்பிலான சொத்துகளுக்கு சொந்தக்காரர்.

1985 ஆம் ஆண்டு ரூ.5,000 முதலீட்டில் தன் வாழ்க்கையை பங்குச்சந்தையில் ஆரம்பித்தவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தபோது கிட்டத்தட்ட ரூ.33,000 கோடி மதிப்பிலான பங்குகளை வைத்திருந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

எப்படி அவரால் இப்படியான பெரிய பாய்ச்சலை நிகழ்த்த முடிந்தது? என்கிற கேள்விகளுக்கு ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் பொறுமையையும் இந்திய பொருளாதாரத்தை ஆராய்ந்து வைத்திருந்த திறனையும்தான் குறிப்பிடுகிறார்கள்.

தன் 62 வயதில் அவர் உயிரிழந்தபோதும் அவருடைய பங்குச்சந்தை போர்ட்ஃபோலியோ பல ஆயிரம் கோடிகளில் அமைதியாக இருந்திருக்கிறது.

எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு மதிப்பிலான பங்குகளை வைத்திருந்தார் என கடந்த ஜூன் மாத அடிப்படையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அவருடைய இறுதி போர்ட்ஃபோலியோவில் முதல் 15 இடங்களில் உள்ள  பங்குகளின் விலை (கோடிகளில்)..

_டைட்டன் நிறுவனம் - ரூ.11,089

_ஸ்டார் ஹெல்த் & அலைடு இன்ஸூரன்ஸ் - ரூ.7,013

_டாடா மோட்டார்ஸ் - ரூ.1,713

_கிரிசில் - ரூ.1,304

_ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் - ரூ.901

_ஃபெட்ரல் வங்கி - ரூ.893

_கனரா வங்கி - ரூ.822

_இந்தியன் ஹோட்டல்ஸ் - ரூ.816

_என்.சி.சி - ரூ.430

_நஜாரா டெக்னாலஜிஸ் - ரூ.424 

_டிவிஆர் ஆர்டினரி - ரூ.348 

_டாடா கம்யூனிகேஷன்ஸ் - ரூ.337

_ராலீஸ் இந்தியா - ரூ.312 

_எஸ்கார்ட்ஸ் குபோட்டா - ரூ.308 

_கரூர் வைஸ்யா வங்கி - ரூ.230 

இது, கடந்த ஜூன் மாத நிலவரம் என்பதால் கடந்த ஒன்றரை மாதத்தில் பங்குகளின் மதிப்புகள் அதிகரித்தும் குறைந்தும் இருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com