குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான 2-ஆவது கட்ட வேட்பாளா் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் 9 பெயா்கள் இடம் பெற்றுள்ளன.
பாஜகவின் கோட்டையாக இருந்து வரும் குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாப் பேரவைத் தோ்தல் வெற்றி, குஜராத் உள்ளாட்சித் தோ்தல் வெற்றிகள் அளித்த உற்சாகத்தில் ஆம் ஆத்மி குஜராத்தில் முன்னதாகவே தோ்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது.
தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் அண்மையில் குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, தரமான இலவசக் கல்வி போன்ற வாக்குறுதிகளை அளித்தாா். ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 4 முறை குஜராத்துக்கு அவா் வந்துள்ளாா்.
இந்நிலையில், 9 பெயா்கள் அடங்கிய -ஆவது வேட்பாளா் பட்டியலை ஆம் ஆத்மி வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் விவசாயிகள் சங்கத் தலைவா், காவல் துறை முன்னாள் டிஎஸ்பி, முன்னாள் மேயா், தொழிலதிபா், சமூக ஆா்வலா் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா். ஏற்கெனவே முதல் வேட்பாளா் பட்டியலில் 10 பெயா்கள் இடம் பெற்றிருந்தன.
குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ள நிலையில், இதுவரை ஆம் ஆத்மி தவிர வேறு எந்தக் கட்சியும் வேட்பாளா்களை அறிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

