தில்லியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தில்லி சென்றுள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, மத்திய அமைச்சர்களையும் நேரில் சந்தித்து மாநில திட்டப்பணிகள் குறித்து ஜெகன் மோகன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.