
பஞ்சாப் மாநிலத்திற்கு முதல்முறையாக வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பான வரவேற்பளிக்க உள்ளது.
உலகத் தரம் வாய்ந்த ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைப்பதற்காக மதிய உணவிற்குப் பிறகு மாநிலத் தலைநகர் சண்டிகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள முல்லன்பூருக்கு மோடி வருகை தருகிறார்.
பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே அரசியல் மோதல்கள் இருந்தபோதிலும் மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையைப் போன்று ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் திறப்பதற்காக மாநிலத்தில் மோடியின் வருகைக்காக ஆம் ஆத்மி சிவப்பு கம்பளம் விரித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பிரகாஷ் பாதல் முதல்வராக இருந்தார்.
ரூ.660 கோடி செலவில் மத்திய அரசால் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 300 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்க நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.