மனிதர்களைக் கண்டால் அஞ்சி மறைந்துகொள்ளும் எலிக்கூட்டம், மனிதர்களைப் போன்று கூட்டமாக நீராடும் விடியோ இணையத்தில் பரலால் பகிரப்பட்டு வருகிறது.
இதில், வெள்ளை எலி ஒன்று மனிதர்களைப் போன்று உடல், முகம், கை, கால்களை நன்கு தேய்த்துக் குளிக்கிறது. இதனால், இந்த விடியோ வைரலாகி வருகிறது.
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய், பூனை போன்றவை மனிதர்களுடன் வளர்வதால், மனிதர்களைப் போன்ற குணாதிசயங்களுடன் நடந்துகொள்வது இயல்பானது.
ஆனால், மனிதர்களைக் கண்டால் ஓடி ஒளிந்துகொள்ளும் எலி, குளிக்கும்போது மனிதர்களைப் போன்று நன்கு உடலைத் தேய்த்து குளிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் கை, கால், முகம் என தனித்தனியாக தேய்த்து குளிப்பது மனிதர்கள் குளிப்பதைப் போன்று இருப்பதாக பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கருப்பு எலிகள் கூட்டமாக குளித்துக்கொண்டிருக்க, வெள்ளை நிற எலி கரையில் நின்றபடி கை, முகம், கால்களைத் தேய்த்துக் குளிப்பது பலரைக் கவர்ந்துள்ளது.
இதனை அப்பகுதியிலிருந்த ஒருவர் விடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இந்த எலி கடந்த பிறவியில் மனிதனாக பிறந்திருக்கும் என்றும், எலி சோப்பு கேட்கப்போகிறது எனவும் பலர் விடியோவில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்
காதல் ஹீரோ - மாஸ் ஹீரோவான விஜய்! பாக்ஸிங் சாம்பியன் பத்ரி!

குடும்ப உறவுகளைக் கொண்டாடிய விஜய்யின் காதலுக்கு மரியாதை!
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly



