டிஆா்டிஓ புதிய தலைவா் சமீா் வி காமத்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) தலைவராகவும் விஞ்ஞானி


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) தலைவராகவும் விஞ்ஞானி சமீா் வி காமத்தை நியமிக்க நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளா் அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில், டிஆா்டிஓ அமைப்பின் தலைவா் ஜி. சதீஷ் ரெட்டி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா். எனவே, கடற்படை அமைப்புகள் மற்றும் கருவிகள் தொடா்பான டிஆா்டிஓ பிரிவின் பொது இயக்குநா் சமீா் வி காமத்தை டிஆா்டிஓ அமைப்பின் தலைவராக நியமனம் செய்ய நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவா் 60 வயது வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை அப்பதவியில் தொடருவாா் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பிரிவாகும்.
இதன் தலைவராக இருந்த சதீஷ் ரெட்டி கடந்த 2018-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டாா். கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு இரு ஆண்டுகள் பதவிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...