காதலியை சந்திக்கச் சென்ற இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்!

காதலியை சந்திக்கச் சென்ற இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்!

உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியைச் சந்திக்கச் சென்றபோது குடும்பத்தினரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Published on

ரேபரேலி: உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியைச் சந்திக்கச் சென்றபோது குடும்பத்தினரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சரேணி காவல்துறை வட்டத்திற்குள்பட்ட மசாபூர் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

செவ்வாயன்று இரவு அங்கீத் தனது காதலியைச் சந்திக்கச் சென்றுள்ளார். இதையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் அங்கீத்தை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். 

குடும்பத்தினர் மற்ற உறவினர்களை அழைத்தனர். அவர்கள் அனைவரும் இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். அவன் அலற ஆரம்பித்தவுடன், அவர்கள் தங்கள் வீட்டை விட்டு அங்கீத்தை வெளியேற்றிவிட்டு, பாதிக்கப்பட்டவர் தங்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டைத் தாக்கியதாகக் கூச்சலிடத் தொடங்கினர். 

அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவர்கள் 
அங்கித்தை அருகிலுள்ள மிஸ்ரா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கீத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காதலித்த பெண்ணும், இளைஞரும் ஒரே கிராமத்தில் வசிப்பவர்கள் என்று தெரிய வந்தது. 

முதற்கட்ட விசாரணையில் இந்த வழக்கில் மேலும் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அலோக் பிரியதர்ஷி தெரிவித்தார்.

மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com