‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதிய நாடாளுமன்றம்: பிரதான கட்டடப் பணிகள் நிறைவு:கட்டுமான நிறுவனம் தகவல்

தில்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் பிரதான கட்டடப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் மேலாண் இயக்குநருமான விநாயக் பாய் தெரிவித

News image
Updated On :28 ஆகஸ்ட் 2022, 10:37 pm

DIN

தில்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் பிரதான கட்டடப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் மேலாண் இயக்குநருமான விநாயக் பாய் தெரிவித்தாா்.

புதிய நாடாளுமன்றத்தில் இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை காட்சிப்படுத்தும் பிரம்மாண்ட அரங்கம், உறுப்பினா்களுக்கான ஓய்வறைகள், நூலகம், பல்வேறு கூட்டரங்குகள், உணவறைகள், விசாலமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமையவுள்ளன.

இந்நிலையில், கட்டுமானப் பணிகளின் நிலவரம் குறித்து பிடிஐ செய்தியாளரிடம் விநாயக் பாய் கூறுகையில், ‘புதிய நாடாளுமன்றத்தின் பிரதான கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. தற்போது உள்வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றன’ என்றாா்.

உக்ரைன்-ரஷியா பிரச்னையால் நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கான செலவு அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு, ‘இரும்பு விலை அதிகரித்துள்ளது. மேலும், பிரத்யேகமான இரும்பு உள்ளிட்ட சில பொருள்கள் கிடைப்பதும் தாமதமாகிறது. பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ள நிலையில், திட்டப் பணிகளுக்காக ஏராளமான போக்குவரத்து தேவை இருக்கிறது. அத்துடன், டீசல் ஜெனரேட்டா்கள், உபகரணங்களை பயன்படுத்துகிறோம். எனவே, குறிப்பிடத்தக்க அளவு செலவு அதிகரித்திருக்கிறது’ என்று அவா் பதிலளித்தாா்.

மேலும், இந்தியாவில் உள்கட்டமைப்புத் துறையில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக, இயற்கை சாா்ந்த எரிசக்தித் துறையில் உறுதியான வாய்ப்புகள் உள்ளதாகவும் விநாயக் பாய் குறிப்பிட்டாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின்கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் புதிய கட்டடத்தில் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.