நொய்டா இரட்டைக் கோபுர கட்டடம்: ஆரம்பம் முதல் முடிவு வரை

நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சூப்பர்டெக்கின் இரட்டைக் கோபுர கட்டடம் பாதுகாப்பாக இன்று (ஆகஸ்ட் 28) தகர்க்கப்பட்டது.
நொய்டா இரட்டைக் கோபுர கட்டடம்: ஆரம்பம் முதல் முடிவு வரை
Published on
Updated on
1 min read

நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சூப்பர்டெக்கின் இரட்டைக் கோபுர கட்டடம் பாதுகாப்பாக இன்று (ஆகஸ்ட் 28) தகர்க்கப்பட்டது.

இந்த இரட்டைக் கோபுரக் கட்டடம் சூப்பர்டெக் குரூப் என்ற ரியல் எஸ்டேட் குழுமத்தால் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்திற்கு நொய்டா நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்தக் கட்டடம் கட்டத் தொடங்கியது முதல் இன்று தகர்க்கப்பட்டது வரையிலான நிகழ்வுகளை பின்வருமாறு காணலாம்.

2004: நொய்டா நிர்வாகத்தின் மூலம் சூப்பர்டெக் குழுமத்திற்கு நகரின் பகுதி 93ல் கட்டடங்கள் கட்டுவதற்கான நிலங்கள் வழங்கப்பட்டது. அதன் பின் கட்டடம் கட்டுவது தொடர்பான பணிகள் தொடங்கியது.

2005: 10 தளங்களுடன் 14 குடியிருப்பு கோபுரங்கள் கட்டுவதற்கு நொய்டா நிர்வாகத்தினால் அனுமதி வழங்கப்பட்டது.

2006: சூப்பர்டெக் சார்பில் நொய்டா நிர்வாகத்திடம் அதிக நிலங்கள் கோரப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்பட்டது. கட்டடத்தின் திட்டத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு 15 குடியிருப்பு கோபுரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

2009: கட்டடம் கட்டும் திட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டது. மேலும் இரண்டு கோபுரங்கள் தற்போதுள்ள திட்டத்துடன் இணைக்கப்பட்டது. 24 தளங்கள் அமைக்கப்படவும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கட்டடம் கட்டும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டது. இதற்கிடையில், சட்டவிதிகளை மீறி இந்தக் கட்டடம் கட்டப்படுவதாக எதிர்ப்பு எழுந்தது.

2012: கட்டடம் கட்டும் நிறுவனம் தளங்களை மேலும் அதிகரிக்க முடிவெடுத்தது. அதன்படி தளங்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்தது. அபேக்ஸ் மற்றும் சியேன் இரட்டைக் கோபுர கட்டட வேலைகள் முழு வீச்சில் தொடங்கியது.

டிசம்பர் 2012: கட்டடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்பு வாசிகள் அலகாபாத் நீதிமன்றத்தை நாடினர். ஒரே வளாகத்தில் புதிய கோபுரங்கள் கட்டுவதற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல புதிதாக கட்டப்படும் கோபுரங்களுக்கு இடையேயான இடைவெளியும் அனுமதிக்கப்பட்ட 16மீட்டர் என்ற அளவை பூர்த்தி செய்யவில்லை.
 

2014: அலகாபாத் உயர் நீதிமன்றம் இரட்டைக் கோபுரங்களை தகர்க்க உத்தரவிட்டது. இதனால், அங்கு நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

மே 2014: சூப்பர்டெக் குழுமம் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


ஆகஸ்ட் 2021: உச்ச நீதிமன்றம் இரட்டைக் கோபுரங்களை 3 மாதத்திற்குள் தகர்க்க வேண்டும் என உத்தரவிட்டது. சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டியது பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளை கிளப்பியது.
 

பிப்ரவரி 2022: தகர்ப்பு பணிகள் மே 22, 2022 அன்று மேற்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.


மே 17, 2022 : கோபுரங்கள் தகர்க்கப்படும் காலக் கெடுவை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் நீட்டித்தது.
 

ஆகஸ்ட் 28, 2022: இரட்டைக் கோபுரங்கள் பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com