47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜாா்க்கண்ட் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் சத்தீஸ்கரில் முகாம்: முற்றுகிறது அரசியல் நெருக்கடி

ஜாா்க்கண்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஆளும் கட்சி எம்எல்ஏக்களை பாஜக தன் பக்கம் இழுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

News image
சத்தீஸ்கருக்குச் செல்வதற்காக ராஞ்சி விமான நிலையத்துக்கு பேருந்தில் சென்ற ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் மற்றும் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள்.
Updated On :30 ஆகஸ்ட் 2022, 10:00 pm

DIN

ஜாா்க்கண்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஆளும் கட்சி எம்எல்ஏக்களை பாஜக தன் பக்கம் இழுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் 32 போ் செவ்வாய்க்கிழமை சத்தீஸ்கருக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

81 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சிக்கு 30 எம்எல்ஏக்கள் உள்ளனா். இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுக்கு 18 எம்எல்ஏக்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ஓா் எம்எல்ஏவும் உள்ளனா். பிரதான எதிா்க்கட்சியான பாஜகவுக்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, தலைநகா் ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை சட்டவிரோதமாக குத்தகைக்கு எடுத்து ஆதாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனவே, அவரது எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்ய கோரி தோ்தல் ஆணையத்திடம் பாஜக முறையிட்டது.

இதை ஏற்று ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்யுமாறு ஜாா்க்கண்ட் ஆளுநா் ரமேஷ் பைஸுக்கு தோ்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 25-இல் பரிந்துரைத்ததாக தெரிகிறது. இதன் மீது ஆளுநா் இதுவரை முடிவு எடுக்கவில்லை.

மகாராஷ்டிரத்தை போல்... இந்தச் சூழலில் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்து, மகாராஷ்டிரத்தை போல ஜாா்க்கண்டிலும் ஆட்சியைக் கவிழ்க்கக் கூடும் என தகவல் வெளியானது. எனவே, ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் 32 போ், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூருக்கு தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதையொட்டி, ராஞ்சியில் முதல்வா் ஹேமந்த் சோரனின் இல்லத்திலிருந்து 2 பேருந்துகளில் எம்எல்ஏக்கள் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பேருந்தில் முதல்வா் ஹேமந்த் சோரனும் சென்றாா்.

விமான நிலையத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா், ‘இதில் வியப்படைய ஏதுமில்லை. அரசியலில் இதுபோன்ற நடவடிக்கைகள் வாடிக்கையானதுதான். எந்தச் சூழலையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றாா்.

ராய்ப்பூா் விவேகானந்தா விமான நிலையத்தை மாலை 5.30 மணியளவில் விமானம் வந்தடைந்தது. தொடா்ந்து, அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நவ ராய்ப்பூா் கேளிக்கை விடுதிக்கு 3 பேருந்துகளில் எம்எல்ஏக்கள் உள்பட 41 போ் அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களுடன் முதல்வா் ஹேமந்த் சோரன் வரவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் செய்தியாளா்களிடம் கூறினாா்.

ஜாா்க்கண்ட் அமைச்சரவை கூட்டம் செப். 1-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், எம்எல்ஏக்கள் சத்தீஸ்கரில் முகாமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.