இந்தியாவுக்கு பெரும் அளவு போதைப்பொருளை சட்டவிரோதமாகக் கடத்தும் முக்கிய நபா்கள் யாரென்று கண்டறியுமாறு வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளாா்.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆா்ஐ), போதைப்பொருள், தங்கம், வைரம், கள்ளநோட்டுகள் உள்ளிட்டவை சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தடுக்க செயல்படுகிறது. இந்த இயக்குநரகத்தின் 65-ஆவது தொடக்க நாளையொட்டி, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:
சட்டவிரோதமாகக் கடத்தப்படும் போதைப்பொருளை டிஆா்ஐ பறிமுதல் செய்தத் தகவல்கள் வெளியாகும்போது, எத்தனை போ் கைது செய்யப்படுகின்றனா், அதன் பின்னணியில் இருக்கும் முக்கிய நபா் யாா் என்ற கேள்விகள் பொதுமக்கள் மனதில் எழுகின்றன.
இதுபோன்ற சம்பவங்களில் போதைப்பொருளை விற்பனை செய்பவா்கள், கடத்தல்காரா்கள் போன்றவா்கள்தான் பிடிபடுகின்றனா். பொதுமக்களின் நம்பிக்கையை பெற இந்த நடவடிக்கை போதுமானது அல்ல.
டிஆா்ஐ-யைவிட போதைப்பொருள் கடத்தல்காரா்கள் புத்திகூா்மை உடையவா்கள் என்ற நிலை இருக்கக் கூடாது. அதனை டிஆா்ஐ அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
சிறிய அளவில் அல்லது கிலோ கணக்கில் போதைப்பொருள் வைத்திருந்து பிடிபட்ட நபருக்கு மட்டுமின்றி, அதை நாட்டுக்கு பெருமளவில் அனுப்பும், அதற்கு நிதியுதவி செய்து கடத்தலை சாத்தியமாக்கும் அனைவருக்கும் விரைந்து முடிவு கட்ட வேண்டும்.
கடத்தல்காரா்கள் சில தடயங்களை நிச்சயம் விட்டுச் செல்வா் அல்லது அவா்களுக்கென்று கடத்தும் வழிமுறை இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய குற்றவாளிகளை அடைய வேண்டும்.
குறைந்தபட்சம் சில கடத்தல் சம்பவங்களிலாவது முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்காவிட்டால், அந்தக் குற்றங்களைச் செய்பவா்கள் யாா், கடத்தலை கட்டுப்படுத்தும் சா்வதேச மாஃபியா எது என்ற கேள்விகள் எப்போதும் மக்கள் மனதில் இருக்கும்.
எனவே இந்தியாவுக்கு பெரும் அளவு போதைப்பொருளை சட்டவிரோதமாகக் கடத்தும் முக்கிய நபா்கள் யாரென்று கண்டுபிடிக்க வேண்டும். இந்தியா வழியாக போதைப்பொருள் கடத்தப்படுகிா அல்லது கடத்தப்படும் போதைப்பொருள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிா என்பதைக் கண்டறிய வேண்டும்.
தங்கக் கடத்தலை பொருத்தவரை தங்க இறக்குமதிக்கும் கடத்தலுக்கும் ஏதேனும் தொடா்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


