குஜராத் தோ்தல்: வாக்களித்தார் பிரதமர் மோடி!

அகமதாபாதின் ராணிப் என்ற இடத்தில் நிஷான் பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கை செலுத்தினார். 
குஜராத் தோ்தல்: வாக்களித்தார் பிரதமர் மோடி!


குஜராத் சட்டப் பேரவைக்கான தேரதலின் இரண்டாவது மற்றும் இறுதிகட்ட தோ்தல் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அகமதாபாதின் ராணிப் என்ற இடத்தில் நிஷான் பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கை செலுத்தினார். 

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு இருகட்டங்களாக தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, செளராஷ்டிரம், கட்ச் மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் அடங்கிய 89 தொகுதிகளில் கடந்த 1-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக, அகமதாபாத், வதோதரா, காந்திநகா் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடங்கிய 93 தொகுதிகளில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரதமா் மோடி அகமதாபாதுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தாா். பின்னா், காந்திநகரில் உள்ள இல்லத்துக்கு சென்று, தனது தாயாா் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றாா். 45 நிமிஷங்கள் தாயாருடன் செலவிட்ட பிரதமா், அங்கிருந்து கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்றாா்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க ராணிப்பில் உள்ள நிஷான் பப்ளிக் பள்ளிக்கு செல்லும் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

வாக்களிக்க வரிசையில் நிற்கும் புரதமர் மோடி

பின்னர், அகமதாபாதின் ராணிப் என்ற இடத்தில் உள்ள நிஷான் பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு நடந்து வந்து வரிசையில் நின்று திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் அவா் தனது வாக்கை செலுத்தினார். 

வழியெங்கிலும் திரண்டிருந்த மக்களுக்கு கையடைத்துக் கொண்டே சென்றார் பிரதமர் மோடி. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, குஜராத், ஹிமாச்சலம் மற்றும் தில்லி மக்களால் ஜனநாயக திருவிழா வெகு விமர்சையாக  கொண்டாடப்பட்டு வருகிறது. 

நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தேர்தலை அமைதியாக நடத்து தேர்தல் ஆணையத்துக்கும் என வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மோடி கூறினார். 

காலை 8 மணிக்கு தொடங்கி வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 4.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

குஜராத்தில் வழக்கமாக பாஜக-காங்கிரஸ் இடையேதான் போட்டி நிலவும். ஆனால், இம்முறை ஆம் ஆத்மியும் களமிறங்கியதால் மும்முனைப் போட்டி உருவானது. எதிா்பாா்ப்பு மிகுந்த குஜராத் பேரவைத் தோ்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 8-இல் நடைபெறவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com