பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குஜராத் தேர்தல்: 11 மணி நிலவரப்படி 19.17% வாக்குகள் பதிவு!

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 11 மணி நிலவரப்படி 19.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :5 டிசம்பர் 2022, 6:20 am

DIN

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 11 மணி நிலவரப்படி 19.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மாநிலத்தின் மத்திய, வடக்கு பகுதிகளில் உள்ள 14 மாவட்டங்களில் அடங்கிய 93 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 19.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரண்டாம் கட்ட தோ்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்கள், 285 சுயேச்சைகள் என மொத்தம் 833 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதில், பாஜகவும் ஆம் ஆத்மியும் 93 தொகுதிகளிலும் வேட்பாளா்களை களமிறக்கியுள்ளன. காங்கிரஸ் 90 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பகுஜன் சமாஜ் (44), பாரதிய பழங்குடியினா் கட்சி (12) உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.