தில்லி மாநகராட்சி தேர்தல்: சுல்தான்புரி தொகுதியில் திருநங்கை வேட்பாளர் வெற்றி!

ஆத் ஆத்மி கட்சியின் சார்பில் தில்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை வேட்பாளர் பாபி வெற்றி பெற்றுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆத் ஆத்மி கட்சியின் சார்பில் தில்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை வேட்பாளர் பாபி வெற்றி பெற்றுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தில்லி மாநகராட்சி தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியுள்ளது. 250 வாா்டுகளுக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 50 சதவிகிதம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர்.

சுல்தான்புரி ஏ-வார்டில், காங்கிரஸ் வேட்பாளர் வருணா டாக்கவை எதிர்த்துப்   போட்டியிட்ட திருநங்கை பாபி 6,714 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பாபி தனது தொகுதியை அழகுபடுத்தவும், தனது அண்டை வீட்டாரின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் விரும்புவதாகக் கூறினார். 

மேலும், மாநகராட்சி தேர்தலில் ஊழலைக் களையப் பாடுவேன் என்றும் பாபி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com