ஆம் ஆத்மியை தேசியக் கட்சியாக்கிய குஜராத் மக்களுக்கு நன்றி: கேஜரிவால்

ஆம் ஆத்மி தேசியக் கட்சி ஆகிவிட்டதாக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மியை தேசியக் கட்சியாக்கிய குஜராத் மக்களுக்கு நன்றி: கேஜரிவால்

ஆம் ஆத்மி தேசியக் கட்சி ஆகிவிட்டதாக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த டிச. 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று(டிச. 8) காலை முதல் நடைபெற்று வருகின்றது.

பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவைப்படும் நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி பாஜக 135 தொகுதிகளில் வெற்றி, மேலும் 21 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 12 தொகுதிகளில் வெற்றி, மேலும் 5 தொகுதிகளில் முன்னிலை. ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் மேலும் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.  

இன்றைய தேர்தல் மூலமாக ஆம் ஆத்மி தேசியக் கட்சியாக வலுப்பெற்றுள்ளதாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

'கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி சிறிய கட்சி. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தேசியக் கட்சி. 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இதற்கு கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். குஜராத் மக்களுக்கும் நன்றி. தேசிய கட்சியாக குஜராத் மக்கள்தான் காரணம். தேர்தல் பிரசாரத்தின்போது வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி.

குஜராத் பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. 13% வாக்குகளைப் பெற்றதன் மூலம் நாங்கள் அந்தக் கோட்டைக்குள் நுழைய முடிந்திருக்கிறது. இதுவரை 39,00,000 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள குஜராத் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com