
புது தில்லி: ஞாயிறன்று கோவாவில் அமைக்கப்பட்டுள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருக்கிறார்.
இது பற்றி தகவல் தெரிவித்திருக்கும் அதிகாரிகள், 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்ற போது நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ஆக இருந்தது, ஆனால் அது தற்போது 140 ஆக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்
அது மட்டுல்ல, அடுத்த 5 ஐந்தாண்டுகளில், விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு, இந்த எண்ணிக்கை 220 ஆக அதிகரிக்கப்படும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
இதனை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிரதமர் மோடி புதிய விமான நிலையங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.