எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்த பிரதமர்

மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்த பிரதமர்

மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார்.

மகாராஷ்டிரத்தில் பல்வேறு திட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 11) அடிக்கல் நாட்டினார். முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தினை தொடங்கி வைத்தப் பிரதமர் மோடி சக பயணிகளுன் ரயிலில் பயணித்தார். மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், தற்போது நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைத்துள்ளார்.

இந்த எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டும் பணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி அப்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,575 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தின் வார்தா சாலையில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் பல விதமான மருத்துவ தொழில் நுட்ப வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனையின் மூலம் விதர்பா பகுதியில் உள்ள மக்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மகாராஷ்டிர ஆளுநர் பகந்த் சிங் கோஷியாரி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com