
புது தில்லி: நாட்டில் மொத்தம் உள்ள ஐஐடிகளில் 4,502 பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தில் தற்போது 493 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் 11,000 பேராசிரியா் பணியிடங்கள் காலியாக இருப்பது மத்திய கல்வி அமைச்சக தகவல் மூலமாக தெரியவந்துள்ளது.
இதுதொடா்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) உறுப்பினா் ரவிக்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை சமா்ப்பித்த பதிலில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்ட 18,956 பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் பணியிடங்களில் 6,180 பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஐஐடி-க்களில் அனுமதிக்கப்பட்ட 11,170 பேராசிரியா் பணியிடங்களில் 4,502 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட 1,566 பேராசிரியா் பணியிடங்களில் 493 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் விரைந்து நிரப்ப அனைத்து உயா் கல்வி நிறுவனங்களுக்கும் கடிதம் மூலமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
காலிப்பணியிடங்கள் உருவாவதும், அதனை நிரப்புவதும் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கைதான் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் உருவாவது மற்றும் அதனை நிரப்புவது தொடர்பாக நடவடிக்கைகளை மாதந்தோறும் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.