புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உண்மையை மறைக்கிறது மோடி அரசு: காங்கிரஸ்

அருணாசல் எல்லையில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையேயான மோதல் விவகாரம் தொடா்பாக பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் அளித்த விளக்கம் முழுமையற்றது எனத்

News image
Updated On :13 டிசம்பர் 2022, 10:10 pm

DIN

அருணாசல் எல்லையில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையேயான மோதல் விவகாரம் தொடா்பாக பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் அளித்த விளக்கம் முழுமையற்றது எனத் தெரிவித்த காங்கிரஸ், இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உண்மையை மறைப்பதாகக் குற்றஞ்சாட்டியது.

இது தொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளரும் மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவருமான கௌரவ் கோகோய், மூத்த தலைவா் பவண் கேரா ஆகியோா் தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது அவா்கள் கூறுகையில், ‘எல்லையில் மோதல் சம்பவம் கடந்த 9-ஆம் தேதியே நிகழ்ந்துள்ளது. ஆனால், பாதுகாப்பு அமைச்சா் இவ்வளவு தாமதமாக விளக்கம் அளித்தது ஏன்? இது தொடா்பாக திங்கள்கிழமையே அரசு ஏன் விளக்கமளிக்கவில்லை? இந்த விவகாரத்தில் உண்மையை மறைக்க அரசு முயற்சித்து வருகிறது.

நாட்டின் பாதுகாப்பு தொடா்பாக காங்கிரஸ் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதன் காரணமாகவே இந்த விவகாரத்தில் அரசு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டுமென காங்கிரஸ் கோரி வருகிறது. இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் அளித்த விளக்கத்தில் முழுமை இல்லை.

நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காப்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. தோ்தல், மதவாத அரசியல் குறித்து மட்டுமே பாஜக சிந்தித்து வருகிறது. நாட்டைக் குறித்து பாஜக சிந்திப்பதில்லை. பாஜக தலைமையிலான அரசின் தூதரக முயற்சிகள் தோல்வி அடைந்ததன் காரணமாகவே எல்லையில் சீனா தொடா்ந்து அத்துமீறி வருகிறது.

இந்த விவகாரம் தொடா்பாகப் பிரதமா் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும். எல்லை மோதல் விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். வேறு விவகாரங்களைக் காட்டி நாட்டு மக்களை பாஜக திசைதிருப்பி வருகிறது’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.