மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை மாலை தரிசனம் செய்தபிறகு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதிமுக தலைமையில் களமிறங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.
பாஜக மேலிடப் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தமாக உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இன்று இரவுக்குள் ஒப்பந்தம் கையொப்பமாகும் எனத் தெரிகின்றது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை 4 மணிக்கு பிரசாரத்தை தொடங்கவுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நாளை மாலை தரிசனம் செய்துவிட்டு, அந்த தொகுதியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.
Summary
Worship at the Kapaleeswarar temple..! EPS starts campaigning tomorrow!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்பு

எடப்பாடி கே.பழனிசாமி சேலம் வருகை

துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி! இபிஎஸ் பேச்சு

தவெகவில் இணைகிறாரா சி. விஜயபாஸ்கர்? இபிஎஸ்ஸுக்கு எதிராக தொடர் பதிவு!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



