மனைவியைக் கொன்றதாக பல காலமாக சிறையில் இருந்தவர்; இறுதியில் தெரிய வந்த உண்மை

மனைவியைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்ட பல ஆண்டு காலமாக சிறையில் கணவர் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது மனைவி உயிரோடு இருப்பது தெரிய வந்துள்ளது.
மனைவியைக் கொன்றதாக பல காலமாக சிறையில் இருந்தவர்; இறுதியில் தெரிய வந்த உண்மை
மனைவியைக் கொன்றதாக பல காலமாக சிறையில் இருந்தவர்; இறுதியில் தெரிய வந்த உண்மை


டௌஸா: ராஜஸ்தான் மாநிலத்தில், மனைவியைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்ட பல ஆண்டு காலமாக சிறையில் கணவர் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது மனைவி உயிரோடு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மெஹந்திபூர் பாலாஜி காவல்நிலையத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட பெண் தான், 7 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டு, அந்த வழக்கில் கணவர் உள்பட 2 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள்தான், அப்பெண் இருக்கும் இடம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில், காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி கூறுகையில், பாதிக்கப்பட்ட சோனு  கடந்த 2015-ம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பிறகு, சோனு பெயரில் இருந்த நிலம் மற்றும் சொத்துகளை தன் பெயரில் மாற்றித் தருமாறு ஆர்த்தி கோரியுள்ளார். அவ்வாறு செய்ய சோனு மறுத்ததால், அவர் காணாமல் போனார், அதன் பிறகு, ஆர்த்தியை பல இடங்களிலும் தேடினார்கள். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, மதுரா அருகே கால்வாய் ஒன்றில், பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. உடல் கூறாய்வு செய்யப்படாமலேயே, அப்பெண்ணின் சடலம் எரியூட்டப்பட்டது.

6 மாதங்களுக்குப் பின், ஆர்த்தியின் தந்தை காவல்நிலையம் வந்து தனது மகளைக் காணவில்லை என்று புகார் அளித்தார். இதையடுத்து, எரியூட்டப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைக் காட்டியதும், அது தனது மகள் ஆர்த்தி என்று தந்தை அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து, ஆர்த்தியின் கணவர் சோனு மீது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சோனு மற்றும் அவரது நண்பரைக் கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.

பிணையில் வெளியே வந்த சோனுவும், அவரது நண்பரும் ஆர்த்தி இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து காவல்நிலையத்தில் தெரிவித்ததையடுத்து, ஆர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். 

விரைவில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று சோனுவும் நண்பரும் காத்திருக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com